நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதுடன், ஐவர் காணாமல் போயுள்ளனர். கொழும்பில் தற்போது நடைப...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதுடன், ஐவர் காணாமல் போயுள்ளனர்.
கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதனைக் குறிப்பிட்டார்.
சீரற்ற வானிலையினால் 2,313 குடும்பங்களைச் சேர்ந்த 23,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கான நிதியை ஜனாதிபதி உடனடியாக வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், இந்த அனர்த்தங்களின் பின்னர் ஏற்படும் பின்விளைவுகள் தொடர்பில் தாம் உடன் கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.