வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத்தின் 47 ஆவது நிர்வாகத்தின் பதவியேற்பு விழாவானது வட்டுக்கோட்டை லயன்ஸ் கழக செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது . இ...
வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத்தின் 47 ஆவது நிர்வாகத்தின் பதவியேற்பு விழாவானது வட்டுக்கோட்டை லயன்ஸ் கழக செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது .
இதன் பொழுது லயன் ஜெயந்தன் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.இவர் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் சமாதான நீதிவானும் ஆவார்.
குறித்த நிகழ்வுகளில் நோயாளர் நலன்புரி கொடுப்பனவுகள் , பொருன்மியம் நலிந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு .
புதிதய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வும் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.
இதன் பொழுது லயன்ஸ் கழகங்களின் இரண்டாம் நிலை உப ஆளுநர் ஜீவந்த பெரேரா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இதேவேளை யாழ் மாவட்ட லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ,பயனாளிகள் ,
,றோட்டேறியனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன்,யசோதா சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.