யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் பேருந்து பயணித்த இருவர் பேருந்து சாரதி மீதும் பயணி ஒருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். காயம...
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் பேருந்து பயணித்த இருவர் பேருந்து சாரதி மீதும் பயணி ஒருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
ஏ9 வீதியில் சித்துப்பாத்தி மயானத்திற்கு முன்பாக கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்திலேயே குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கைதடி பகுதியில் பேருந்தில் ஏறிய இருவர் அரியாலையில் இறங்கிய போது நடத்துநருடன் முரண்பட்டுள்ளனர். இதில் நியாயம் கேட்க சென்ற சாரதி மற்றும் பயணி மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.