நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேற்று ...
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு மத நல்லிணக்கத்தை குலைத்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.