அத்துருகிரிய பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 'க்ளப் வசந்த' என்ற சுரேந்திர வசந்த கொல்லப்பட்டமை தொடர்ப...
அத்துருகிரிய பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 'க்ளப் வசந்த' என்ற சுரேந்திர வசந்த கொல்லப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 21 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
அவரை இன்றைய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.