யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸா...
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீட்டின் கதவினை உடைத்து உள்ள சென்று பார்த்த பார்த்த போது ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது
குறித்த நபர் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.