கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிளப் வசந்தவின் மனைவி களு...
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவரை வழக்கமான வார்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெட்டூ நிலையத்தை திறந்து வைக்கச் சென்ற அவரது கணவர், மற்றொரு நபருடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
படுகாயமடைந்த கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் மூன்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அவரது மார்பில் இருந்த ரவைகளை அறுவை சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றினர்.
இதேவேளை, இது தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றையவர் பாடகி கே.சுஜீவாவின் கணவர் நயனா வாசுல என்பதும் குறிப்பிடத்தக்கது.