வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாத...
வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துடன் பல சந்திப்புக்களும், 3 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று 4 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட கலந்துரையாடலுடன் காணி உறுதி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.