தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜீலை 21 ம் மதிய...
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜீலை 21 ம் மதியம் 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
இதன்போது பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.