வடக்கு கிழக்கு இளையோர் மீனவர் கூட்டு இளையோர் மீனவர்களை ஒன்றிணைக்கும் காலத்தின் தேவை என மன்னார் சிவில் பொருளாதார அமைப்பின் பணிப்பாளர் ஜான்ச...
வடக்கு கிழக்கு இளையோர் மீனவர் கூட்டு இளையோர் மீனவர்களை ஒன்றிணைக்கும் காலத்தின் தேவை என மன்னார் சிவில் பொருளாதார அமைப்பின் பணிப்பாளர் ஜான்சன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு சார்ந்த ஏழு மாவட்டங்கள் சார்ந்து உருவாக்கப்பட்ட மீனவர் கூட்டு ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியா தவிர்ந்த வடக்கு கிழக்கு சார்ந்த ஏழு மாவட்டங்களில் உள்ள இளம் மீனவர்களை இணைத்து இந்த அமைப்பானது உருவாக்கம் பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு சார்ந்த மூத்த மீனவர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த இளம் மீனவ கூட்டினை உருவாக்கியுள்ள நிலையில் மாவட்டம் நீதியான வேலைத்திட்டங்களை மேற்கொள்வோம்.
வடக்கு கிழக்கு மீன் சமூகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கி வருகின்ற நிலையில் அதனை இளம் மீனவ சமூகம் ஒன்றிணைந்து எவ்வாறு பிரச்சினை தீர்வு காண்பது தெடர்பில் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் இரணைதீவு பிரதேசத்தில் மீனவ சமூக்ததை மீள் குடியேற்றாமல் இழுத்தடிப்பு செய்ததன் காரணத்தினால் 24 மணித்தியால தொடர் போராட்டத்தை முன்னெடுத்து சுமார் 50 மீனவ குடும்பங்களை குடியேற்றங்களை குடியேற்ற வழி வகுத்தோம்.
அதே போல சிலாவத்துறையில் மீனவர்கள் தொழில் செய்யும் கடற் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக கடலில் மீன்பிடிக்க அனுமதி எடுதோம்
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய் கொக்குகளாய் கொக்குத் தொடுவாய் மீனவ சமூகம் தென் இலங்கை மீனவர்களின் அத்துமீறலால் தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
யாழ் தீவகத்தின் வளமான கடற்பகுதியில் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக ஊடகங்களின் உதவியுடன் மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறோம்.
அதுமட்டுமல்லாது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடத்தொழில் உபகரணங்கள் செயல் அமர்வுகளை மாவட்ட ரீதியாக நடத்தி வருகிறோம்.
இலங்கையின் அழகான வளைகுடாப் பகுதியான மன்னார் கடற்பரப்பின் வளங்கள் வெளிநாட்டு படகுகளால் அபகரித்து செல்லப்படும் நிலையில் 800 தொடக்கம் 1000 வரையான வெளிநாட்டு படகுகள் இறால் மற்றும் கணவாய் இனங்களை அள்ளிக் செல்கின்றன.
ஆகவே மீனவர்கள் சார்ந்த பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் அதற்கான தீர்வு நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வடக்கு கிழக்கு இளையோர் மீனவர் கூட்டு காலத்தின் தேவையாக உணரப் படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.