எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்ட...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் போராட்டக் கூட்டணியின் பிரதிநிதி லஹிரு வீரசேகர இவ் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மீதொட்டமுல்ல அனர்த்தத்தை ஏற்படுத்திய கொலன்னாவ குப்பை மேட்டு விவகாரத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தின் அமைப்பாளராக நுவான் போபகே செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.