மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி தேர்தல்கள் ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவு...
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி தேர்தல்கள் ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள, ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு தேர்தல்கள் ஆணைய காரியாலயத்தில் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வேட்புமனுக்களை சமர்ப்பித்த பின்னர் அரசியல் கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.