யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் (Bone Marrow Transplant Unit) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த புற...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் (Bone Marrow Transplant Unit)
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையமே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் காணப்படுகின்றது. இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது.
இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலை அல்லது இந்தியாவில் போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான ஒரு விடயங்களை கொண்டுள்ளது. இரண்டு விஷேட படுக்கை அறைகளை கொண்டுள்ளது.
ஆகவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரனவால் வைபவ ரீதியாக எதிர்வரும் வாரம் திறந்து வைக்கப்படவுள்ளது.