ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் சற்று முன்னர் முடிவடைந்துள்ளது. கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் சற்று முன்னர் முடிவடைந்துள்ளது.
கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க இன்று தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இதன்படி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது எனவும் அவர் கூறினார்.
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தகவல்களை வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.