எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். தனது X தளத்தில் பதிவோன்றை பதிவேற்றி அவர...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
தனது X தளத்தில் பதிவோன்றை பதிவேற்றி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“எனது ஜனாதிபதி வேட்பாளரை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். 76 ஆண்டுகளாக, எங்களை வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் சென்ற ஒரு திறமையற்ற அரசியல் குழுவால் நாங்கள் வழிநடத்தப்பட்டோம். இலங்கை வளர வேண்டுமானால், #CrushCorruption வேண்டும். வருமானத்தை அதிகரிக்க நமது இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பு. இலங்கையை முன்னேற்றுவதற்கு என்னுடன் இணையுமாறு ஒவ்வொரு இலங்கையரையும் நான் அழைக்கிறேன்.” என தனது X தள பதிவில் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியிருந்த நிலையில், சரத் பொன்சேகா தோல்வி அடைந்திருந்தார்.