தனமல்வில பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் 22 பாடசாலை மாணவர்களினால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விரி...
தனமல்வில பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் 22 பாடசாலை மாணவர்களினால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சில மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் தனக்கு பலவந்தமாக மதுபானத்தை வழங்கியதாக குறித்த சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தான் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள 19 வயதான மாணவனொருவனை, இந்த சிறுமி காதலித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தனது காதலனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, பாடசாலை மாணவர்களினால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சிறுமி உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படத்தப்பட்ட சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ள சந்தேகநபர்கள், அந்த வீடியோவை வெளியிடுவதாக அச்சுறுத்தி ஒரு வருட காலம் சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சிறுமி காதலித்த மாணவன் உள்ளிட்ட மேலும் 21 மாணவர்கள் இந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
புத்தல பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி, கர்ப்பமடைந்த நிலையில், ராகமை வைத்தியசாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்துக்கொண்ட பெற்றோர்கள், சிறுமியை ராகமையிலுள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
சிறுமி குழந்தை பெற்றெடுத்ததை அடுத்து, ராகமை வைத்தியசாலை நிர்வாகத்தினால் புத்தல பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த புத்தல பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய பொலிஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.