இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20க்கு மேற்பட்டவர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இருப்பினும், 30க்கு...
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20க்கு மேற்பட்டவர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இருப்பினும், 30க்கு மேற்பட்டோர் கட்டுப்பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கடந்த காலங்களைவிட இம்முறைத் தேர்தல் மிகவும் போட்டித்தன்மை வாய்ததாக இருக்கும். எனினும் ஜனாதிபதியாக வருபவர் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும்.
இதற்காக விருப்பு வாக்கு என்ற முறைமையும் வாக்களிப்பில் கொண்டுவரப்படும். 50 வீதத்திற்கு மேல் எவரும் பெறாவிட்டால் தேர்தல் இரத்தாகும்.
மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இருந்தாலும் நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு இருக்கின்ற ஆட்சி தொடரவும் வாய்ப்பு உள்ளது.
இம்முறை “விருப்பு வாக்குகளே ஜனாதினதியை தீர்மானிக்கும்”
இன்றைய நிலையில்
1.ரணில் விக்கிரமசிங்க 2.சஜித் பிரேமதாச 3.நாமல் ராஜபக்ஷ 4.அநுர குமார திஸ்ஸாநாயக்க ஆகிய 4 பேருக்கும் இடையே பாரிய போட்டி நிலவும். இதனால் 51 வீதத்தை பெற்றுக் கொள்வது கடினமான விடயமாக இருக்கும். இதனால் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அதில் 51 வீதத்தை எட்டுபவர் ஜனாதியதியாகும் வாய்ப்பு உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள நால்வரில் ரணில், சஜித், அநுர ஆகியோர் யாரோ ஒருவருடன் இணைவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. இருந்தாலும் ரணில், நாமல் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அவ்வாறு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைந்து போட்டியிட்டால் ஜனாதிபதி, பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
இது எவ்வாறு சாத்தியம்?
ரணிலுக்கு வாக்களிக்கின்றவர்கள் தங்களது 2வது விருப்பு வாக்கை நாமலுக்கும், நாமலுக்கு வாக்களிக்கின்றவர்கள் தமது 2வது விருப்பு வாக்கை ரணிலுக்கும் போட்டால் இது சாத்தியமாகும்.
இங்கு தமிழ் பொது வேட்பாளரின் பங்கு எங்கு இருக்கிறது என்றால் அது கேள்விக்குறி
அளிக்கப்படுகின்ற வாக்குகளே கருத்தில் கொள்ளப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களும் வாக்களிக்காவிட்டாலும் அது ஜனாதிபதி தெரிவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எதிர்பினை காண்பிக்க முடியும்.
அண்ணளவான கணிப்பின்படி பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்குகள் - 17140353 அளிக்கப்படாத மற்றும் நிராகரிக்கப்படும் வாக்குகள் சராசரியாக - 18 வீதம் - 3085264 செல்லுபடியாகும் வாக்குகள் - 14055089 இந்த வாக்குகள்தான் அனைவருக்கும் பிரிபடவிருக்கின்றது.
வாக்களிப்பு வீதங்களை சுமாராக ஆராய்வமேயானால் பின்வரும் விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க
1.ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக இறங்கியிருப்பதால் கட்சியைத் தாண்டிய ஆதரவும் இருக்கும்.
2.ரணிலுக்கு அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் கட்சிகளின் ஆதரவும் கிடைக்கிறது.
3.மொட்டுக் கட்சியின் ஆதரவும் இருக்கிறது.
4.பரீட்சயமற்ற புது சின்னம், பட்டியலின் தரவரிசையும் செல்வாக்கு செலுத்தும்.
ஜனாதிபதி தேர்தலில் 4 முனைப்போட்டி.... கேள்விக்குறியாகும் 51 வீதம்! | 4 Races In Presidential Election 51 Questionable
சஜித் பிரேமதாச
1.முஸ்லீம், மலையக கட்சிகளின் ஆதரவு வெளிப்படையாக கிடைக்கின்றது.
2.மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
3.ஆட்சி மாற்றத்தை எரிர்பார்க்கும் மக்கள்
நாமல் ராஜபக்ஷ
1.இளைஞர்களுடைய அலை வடக்கு கிழக்கு உட்பட இருக்கின்றது.
2.மஹிந்த ராஜபக்ஷவினுடைய வாக்கு அலையும் செல்வாக்கு செலுத்தும்
அனுரகுமார திஸாநாயக்க
1.மாற்றத்தையும் ஊழலற்ற ஆட்சியையும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்
2.இளைஞர்கள் மத்தியிலான ஆதரவு
3.நாமலின் வருகை எனவே மேற்குறிப்பிட்டுள்ள விடயங்களை கருத்தில் கொண்டு பின்வரும் எடுகோள்களுக்கு நாம் வரமுடியும்.
1.கிட்டத்தட்ட 4 வேட்பாளர்களில் ஒருவர் 50 வீதம் பெறுவார் என பார்த்தால் A - 50 வீதம் B - 40 வீதம் C - 5 வீதம் D - 5 வீதம் இது சாத்தியம் இல்லை. காரணம் ஊ - 5 வீதத்தினை பெறாது. எனவே ஜனாதிபதியாக யாரும் வர முடியாது.
2.கிட்டத்தட்ட 4 வேட்பாளர்களில் மூவர் சமமான அளவில் பெறுவார்கள் என பார்த்தால் A - 30 வீதம் B - 30 வீதம் C - 30 வீதம் D - 10 வீதம் எனவே ஜனாதிபதியாக யாரும் வர முடியாது.
3.கிட்டத்தட்ட 4 வேட்பாளர்களில் இருவர் சமமான அளவில் பெறுவார்கள் என பார்த்தால் A - 35 வீதம் B - 35 வீதம் C - 25 வீதம் D - 5 வீதம் எனவே ஜனாதிபதியாக யாரும் வர முடியாது.
4.கிட்டத்தட்ட 4 வேட்பாளர்களில் சாத்தியமாக்கூடியது என பார்த்தால் A - 40 வீதம் B - 32 வீதம் C - 23 வீதம் D - 5 வீதம் இது சாத்தியமான வாக்கு வீதங்களாக இருந்தாலும் ஜனாதிபதியாக யாரும் வர முடியாது.
இருப்பினும் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அந்தவகையில் A,C ஆகிய இருதரப்புகளும் பேசிக் கொண்டதன் அடிப்படையிலும் விருப்பு வாக்குகளை பகிர்ந்து கொண்டதன் அடிப்படையிலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய பதவிகளை பகிர்ந்து கொண்டு ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.