தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று நடைபெற்றது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவான அந்த கொடியில் இரு புறமும் யானைகள் இடம்பெ...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று நடைபெற்றது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவான அந்த கொடியில் இரு புறமும் யானைகள் இடம்பெற்றுள்ளன.
நடுவே உதய சூரியன் போல வாகை மலர் இடம்பெற்றுள்ளது. கட்சி கொடியை நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஏற்றி அறிமுகப்படுத்தினார்.
விஜய் கட்சிக் கொடியுடன் அதற்கான கொடி பாடலையும் உருவாக்கி விஷுவல் உடன் ஒளிபரப்பி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மேடையேறி பேசிய நடிகர் விஜய் தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், அதுபற்றி எல்லாம் கட்சி மாநாட்டில் விரைவில் பேசுவேன் என நன்றி கூறி விடைபெற்றார்.(