அரசாங்கம் தற்போது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைப...
அரசாங்கம் தற்போது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தற்போது தமக்கு 92 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே இருப்பதாகக் கூறுகிறார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் 46 நாட்களில் முடிவடையும்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி மாபெரும் கூட்டணி உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.