மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத்தொகைக்கு 10% ஆண்டு வட்டி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குட...
மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத்தொகைக்கு 10% ஆண்டு வட்டி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.1 மில்லியன் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு 10% வருடாந்திர வட்டி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
முன்னர் வழங்கப்பட்ட 8.5% குறைந்த வட்டி விகிதத்தின் காரணமாக மூத்த குடிமக்கள் தங்களுடைய நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெறுவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
அந்தவகையில், ஜனாதிபதி, நிதி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், வருடாந்த வட்டியை 10% ஆக மாற்றியமைத்து, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.1 மில்லியன் வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு முன்மொழிந்திருந்தார்.