பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு பொறுப்...
பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்த கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
கடந்த மாதம் 18ம் திகதி நடைபெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த பதவிக்கு தகுதியான ஒருவரின் பெயரை பரிந்துரை செய்யுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அன்றைய தினமே அறிவித்திருந்தது.
எனினும், கடந்த 29ம் திகதி வரை குறித்த பரிந்துரை கிடைக்காததை அடுத்து, பொலிஸ் ஆணைக்குழுவிற்கு காணப்படும் அதிகாரத்தின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பாக கடமையாற்றும் லலித் பத்திநாயக்கவை, பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.