மன்னார் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிறிஸ்...
மன்னார் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிறிஸ்தோபர் ஜேசுதாஸன் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் - உதயபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழிலுக்காக மூன்று தொழிலாளிகள் படகில் சென்று மன்னார் கடற்பகுதியை அண்டிய பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர்
அதன் போது , ஒருவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி படகினுள் சுகவீனமுற்று இருந்துள்ளார்
அதனை அடுத்து படகினை கரைக்கு கொண்டுவந்து, யாழ் . போதனா வைத்தியசலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சம்பவம் தொடர்பில் அவருடன் தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளிகளிடமும் வாக்கு மூலங்களை பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்