ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கமைய இலங்கைத் தம...
ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை (S.Sritharan) அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் சிறீதரன் எம்.பியிடம் அவர் கையளித்துள்ளார்.
இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பலரையும் திலகராஜ் சந்தித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கையளித்து கலந்துரையாடினார்.