தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றி உறுதியென்றும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தேசிய மக்கள...
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றி உறுதியென்றும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார 1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள் இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
அனுரவின் வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் அவர் எளிமையாக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சமந்த வித்யாரத்னவின் கருத்துப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தனது முதல் நிர்வாக நடவடிக்கையாக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் 15 அமைச்சு செயலாளர்களை தற்காலிகமாக நியமிப்பார் என கூறியுள்ளார்.