கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்காக கட்சியை சீரமைத்து, திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.