சமீபத்தில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய மிகப்பெரிய சோதனையின்போது 05 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 203 கிலோ கேரள கஞ்சாவுடன்...
சமீபத்தில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய மிகப்பெரிய சோதனையின்போது 05 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 203 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
விசேட அதிரடிப் படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய, புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கிடைத்த தகவலின்படி, ராஜாங்கனை பகுதியில் தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டது.
அங்கு, 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 203 கிலோகிராம் கேரள கஞ்சா அடங்கிய 94 கவர்கள் வைத்திருந்த கலாஓயாவைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ராஜாங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.