எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப...
எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சர்வதேச கண்காணிப்புக் குழுக்களில் ரஷ்யா, பொதுநலவாய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க கருத்துப்படி, தேர்தல் நடவடிக்கைகளின் போது இந்த கண்காணிப்பாளர்கள் முக்கிய கண்காணிப்பை வழங்குவார்கள்.
அதேசமயம், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 11ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.