முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியானது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் கீழ் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள...
முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியானது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் கீழ் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளராக ஞானப்பிரகாசம் சுலக்சன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியினர் கண்ணாடிச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங்க் விஜய்காந்தும் உடனிருந்தார்.