வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை மேலும் வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்...
வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை மேலும் வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ந தேர்தல் வேட்பாளருமான வைத்தியநாதன் தவநாதன் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதை சாத்தியமாக்க தமிழ் மக்கள் தயாராகி விட்டனர் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (26.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
தோற்றுப்போன தமிழ் தேசியத்தையும் அதை தூக்கிப்பிடித்து தமிழ் மக்களை சொல்லொணா துயரங்களுக்கள் தள்ளிவிட்ட தரப்பினரையும் புறந்தள்ளி நடைமுறைக்கு சாத்தியமான பொறிமுறைகளுடன் தமிழ் மக்களை சிறப்பானதோர் வாழ்வியல் நிலையை அடைவதற்கான இலக்கை நோக்கி வழிநடத்தி செல்லும் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வழிமுறையை வெற்றியடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச தமிழ் உறவுகளும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்க வேண்டியது அவசியமாகும்.
அத்துடன் அழிவு யுத்தத்தால் பேரவலங்களை சந்தித்து எதிர்காலம் நோக்கிய கனவுகளுடன் வெறுங்கையுடன் வாழ்ந்த கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு இயலுமானவற்றை பெற்றுக் கொடுத்து அவர்களது வாழ்வியலிலும் மலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்தது ஈ.பி.டி.பியே எனவும் சுட்டிக்காட்டியதுடன் அந்த நினைவுகளுடன் இம்முதுறை தமது வாக்குப்பலத்தை கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பலத்தை எமக்கு வழங்குவார்கள் என்றும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்
முன்பதாக அழிவு யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அனைத்தையும் இழந்து பூச்சிய நிலையில் இருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைகள், குறிப்பாக மக்களுக்கான அனைத்தையும் இழந்து ஏக்கத்துடன் இருந்த மக்களுக்கு அவசியம் தேவையான அனைத்தையும் மத்தியுடன் தனக்கிருந்த தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக முடியுமானவரை பெற்றுக்கொடுத்து கிளிநொச்சி மாவட்டத்தை தூக்கி நிறுத்தியது எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் அவர் தலைமையிலான ஈ.பி.டி.பியும் தான். இதற்கு வேறொருவரும் உரிமை கோர முடியாது.
அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் எமது கட்சிக்கு இதுவரை வழங்கிய அரசியல் அதிகாரங்களைக் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு தேவைகளை முன்னெடுத்து செயற்படுத்திக்காட்டியதும் ஈழ மக்கள் ஜயநாயக கட்சிதான். இம்மாவட்டத்தின் மீள் மலர்ச்சிக்கும் எமது கட்சியின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையினூடான தேசிய நல்லிணக்கம் தான்.
அத்துடன் போலித் தேசியம் பேசி இம்மாவட்ட மக்களின் வாக்குகளால் அதிகாரங்களை பெற்றவர்கள் இம்மாவட்டத்திற்கு அழிவுகளையும் வேதனைகளுடன் அடுத்தவரின் சேவைகளில் குளிர்காய்வதை தவிர வேறெதனையும் செய்திருக்கவில்லை
குறிப்பாக இமத்மாவட்டத்தின் மண்ணையும் பாதுகாத்து, மக்களையும் அவர்களது இறைமையையும் பாதுகாத்து தேசியத்தை முடியுமானவரை உறுதிப்படுத்தியும் கொடுத்திருக்கின்றோம்
இதேநேரம் எமது கட்சியின் நிலைப்பாட்டை இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ள தோடங்கியுள்ளனர். குறிப்பாக புலம்பெயர் தேச உறவுகளும் தாயகத்தில் வாழும் உறவுகளும் போலித் தேசியவாதிகளை ஓரங்கட்ட முடிவுசெய்துவிட்டனர்.
அந்த மாற்றம் எமது ஈ.பிடி.பியை வலுச்சேர்க்கும் வகையில் இருக்கின்றது அதை மேலும் உறுதி செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச தமிழ் உறவுகளும் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.
இதேவேளை இம்மாவட்டம் கல்வியிலும் இதர பல தேவைகளும் மிக பின்னடைவான நிலையிலேயே இருக்கின்றது. இவற்றுக்கும் நாம் தீர்வுகளை காண வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஒரு தொகுதியாகவே கிளிநொச்சி மாவட்டம் இருக்கின்றது. இதனால் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கிளிசொச்சி மாவட்டத்திலிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற பிரசன்னம் இம்முறை நிச்சயம் இருக்கும் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.