ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிரு...
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
ஆனாலும் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் விரக்தி ஏற்பட்டதா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
எவ்வாறாயினும்,திர்வரும் தேர்தலில் பொது மக்கள் தன்னை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் கூட்டணின் சார்பில் ஹிருணிக்கா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.