யாழ் போதனா வைத்தியசாலைக்கு உரிய அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட தெற்காசிய வலயத்தின் மிகச்சிறந்த கண் சத்திர சிகிச்சை பிரிவு அமையவிருக்கு...
யாழ் போதனா வைத்தியசாலைக்கு உரிய அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட தெற்காசிய வலயத்தின் மிகச்சிறந்த கண் சத்திர சிகிச்சை பிரிவு அமையவிருக்கும் அரியாலை மத்திய விளையாட்டு கழகத்திற்கு முன்பாக உள்ள இரண்டு அரை ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பு அமெரிக்காவில் வசிக்கும் சுப்ரமணியம் தர்மேந்திரா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த காணியில் இன்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr. Thangamuthu Sathiyamoorthy தலைமையில் மரநடுகை செய்யப்பட்டடு காணியை துப்புரவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
இதில் கண் சத்திரசிச்சை நிபுணர் Dr.மலரவன். யாழ் போதனா வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் ஜமுனாநந்தா, முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் அரியாலை நாவலடி மாதர் சங்கத்தினர் பிரமுகர்கள் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவருமான கி.கிருஷ்ணமீனன் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் லோகநாதன் சுஜிதன் உட்பட பிரதேச இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.