இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ் மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்து பல்வேறு சந்திப்பிலும் ஈடுபட்டதுடன் பல இடங்களுக்கும் விஜயம் ச...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ் மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்து பல்வேறு சந்திப்பிலும் ஈடுபட்டதுடன் பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்.
இதன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற தூதுவர் வழிபாட்டில் ஈடுபட்டார்.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடினார்.
மேலும் பெண்களின் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை அனுபவங்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் மறைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் இடம்பெற்ற கண்காட்சி
கூடத்தையும் தூதுவர் பார்வையிட்டார்.