ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்ற...
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ் . தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் , ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் , குருபரன் மதன்ராஜ் , அழகசுந்தரம் கிருபாகரன் , முருகவேல் சதாசிவம் , அனோசன் அருந்தவனாதன், இராசதுரை அந்தோனிப்பிள்ளை , துலோஜனா முகுந்தன் மற்றும் செல்வராசா தயாகுலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.