இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலக, சசிகலா ரவிராஜ் தீர்மானித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நாளை (7) வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது...
இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலக, சசிகலா ரவிராஜ் தீர்மானித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை நாளை (7) வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சசிகலா ரவிராஜின் பெயர் சேர்க்கப்படவில்லை.
தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுகுழுவில், எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்களே பெருமளவில் உள்ள நிலையில், எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்பினரே வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
எம்.ஏ.சுமந்திரனை ஆதரித்து பேஸ்புக்கில் பதிவிடும் பெண்ணுக்கும் யாழ்ப்பாண வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கியது பல தரப்பினாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் அரசு கட்சியின் இந்த செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தார்.
அவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட விபரங்களை சசிகலா நாளை அறிவிப்பார்.