தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலை தொடர்வதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் த...
தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலை தொடர்வதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அபிவிருத்தியோடு தீர்வை நோக்கிப் பயணிப்பதே எமது இலக்காகும்.
காணி அதிகாரமும் காவல்துறை அதிகாரமும் இல்லாத அதிகார பகிர்வு தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.