யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள...
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.