ஐஸ் மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களை ஏற்றிச்சென்ற இலங்கை இழுவை மீன்பிடி படகொன்று மாலைதீவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது . இலங்கையிலிரு...
ஐஸ் மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களை ஏற்றிச்சென்ற இலங்கை இழுவை மீன்பிடி படகொன்று மாலைதீவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது .
இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு ஏற்றிச்செல்லப்பட்ட 344 கிலோ ஐஸ் மற்றும் 124 கிலோ கொக்கைன் போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலினடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்குமிடைப்பட்டவர்களெனவும் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த போதைப்பொருட்கள் மாலைதீவுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்டதா அல்லது மாலைத்தீவிலிருந்து வேறு நாடுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதா? என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.