பிரான்ஸில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி 5 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் க...
பிரான்ஸில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி 5 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.சாவகச்சேரி பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் ஊடாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஆவார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் ஆவார்.
கைது செய்ப்பட்ட நபருக்கு சொந்தமாக எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமும் இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.