யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில், ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில், ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஊர்காவற்துறை, தம்பாட்டி உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் இன்றைய தினம் சனிக்கிழமை பிரச்சார ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சுலக்சன் தலைமையில், சக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, கடற்தொழிலாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும், தமது வாழ்வாதரங்கள், பிள்ளைகளின் கல்வி போன்றவற்றை மேம்படுத்த உதவ வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மக்களின் கோரிக்கையை தான் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த சுலக்சன், கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளை , அவர்களின் குரலாக நாடாளுமன்றில் ஒலிப்பேன் எனவும், அதற்காக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மூக்குக்கண்ணாடி சின்னத்திற்கு வாக்களித்து விருப்பு வாக்காக இலக்கம் 3க்கும் வாக்களிக்குமாறும் கோரினார்.