அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்ததைத் தொர்ந்து அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை கென்யா இரத்து செய்துள்ளது. இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, தங்கள் ...
அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்ததைத் தொர்ந்து அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை கென்யா இரத்து செய்துள்ளது.
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது.
இதனையடுத்து அதானி குழுமத்தின் 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை கென்யா இரத்து செய்துள்ளது.
கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை குறித்த 30 ஆண்டு ஒப்பந்தத்திலேயே அதானி குழுமத்துடன் கென்யா கைச்சாத்திட்டிருந்தது.
இந்நிலையிலேயே கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ குறித்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதானி குழும நிறுவனம் கடந்த மாதம் எரிசக்தி அமைச்சகத்துடன் கையொப்பமிட்ட 30 வருட, 736 மில்லியன் டொலர் பெறுமதியான பொது-தனியார் கூட்டு ஒப்பந்தத்தையும் இரத்து செய்வதாக ரூட்டோ கூறினார்.