தமிழ் மக்கள் தத்தமது எதிர்காலத்தையும் தேசத்தையும் வளமாக்கிக்கொள்ள நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை நோக்கி பயணிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்...
தமிழ் மக்கள் தத்தமது எதிர்காலத்தையும் தேசத்தையும் வளமாக்கிக்கொள்ள நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை நோக்கி பயணிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈ.பி.டி.பியின் தென்மராட்சி தொகுதி வேட்பாளர் மருதை தர்சன் அந்த நடைமுறைச் சாத்திய வழிமுறையை நடைமுறையில் வெற்றிகண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பின்னால் இளைஞர் யுவதிகள் அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றயைதினம் (02.11.2024) நடைபெற்ற ஊடக சந்தரிப்பில் கலந்தகொண்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் –
கற்பனை அரசியல் கொள்கையையும் நடைமுறையில் ஒத்துவராத தேர்தல் வாக்குக்கான பரப்புரைகளையும் நம்பி தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக தேசியம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டுவிட்டனர்.
ஆனால் தற்போது உரிமை தேசியம் என்ற போலி உணர்சியூட்டும் அரசியல்வாதிகளின் பின்னால் அணிதிரளகூடாது என்ற முடிவுக்கு மக்கள் வந்தவிட்டனர்.
இந்த மாற்றமானது தமிழ் மக்களிடையே அவசியமானதொன்றாகவே இருக்கின்றது. இதேநேரம் இந்த மாற்றத்தினூடாக தமிழ் மக்கள் தமது அடுத்த அரசியல் தலைமையாக நிலையான கொள்கையையும் சிறந்த தலைமைத்துவத்தையும் தடம்புளராத பொறிமுறைகளையும் கொண்டுள்ள ஈ.பி.டி.பியை வலுப்படுத்தவதும் அவசியமாகவும் இருக்கின்றது.
கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் எமது கட்சி தனக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களை கொண்டு முன்னெடுத்த செயற்றிட்டங்களையும் அதன் வெற்றிகளையும் குறிப்பிடலாம்.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுத வழிமுறையை நோக்கி வலுப்பெற்று சென்ற நிலையில் 1987 களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமை என்ற சிறந்த ஒரு தீர்வு கிடைத்தது.
இது தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என உணர்ந்துகொண்ட எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதை ஏற்றுக்கொண்டதுடன் தொடர்ந்தும் ஆயுத வழிமுறையை நோக்கி தமிழ் மக்கள் நகர்ந்து சென்றால் அது பேரழிவையே ஏற்படுத்தும் என வலியுறுத்தி வந்தார்.
அவரது இந்த தீர்க்கதரிசனம் மிக்க கருத்தை ஏனைய போராட்ட அமைப்புகள் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநலன்களுக்காக ஏற்றுக்கொள்ளாதிருந்தனர். அதுமட்டுமல்லாது அவர்களது சுயநலத்தால் முள்ளிவாய்க்கால் என்றும் யுத்த முனையில் அதன் வலிகளை தமிழ் மக்களே சுமக்க நேரிட்டது.
அதனால்தான் கூறுகின்றேன் டக்ளஸ் தேவானந்தா என்ற ஒரு தீர்க்கதரிசனம் மிக்க தலைவரின் வழியை தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் பின்பற்றுவார்களாக இருந்தால் நிச்சயம் எமது மக்களின் அபிலாசைகயும் விரைவில் நிறைவேறும் என்று.
அதேபோன்று எமது மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துவகையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தகுதியானவராக காணப்படுகின்றார். ஆனால் அவரிடம் இதுவரை தமிழ் மக்கள் அதிகளாவான அரசியல் பலத்தை கொடுக்கவில்லை என்பதுதான் வேதனையானது.
எனவே இம்முறை தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் அரசியல் பரப்பில் மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நடைமுறை யதார்த்தத்தினை புரிந்து ஈ.பி.டி.பியை வலுப்படுத்த வீணைச் சின்னத்துக்கு வாக்களிப்பது அவசியமாகும் எனவும் அழைப்பு விடுத்த அவர் மக்களது பார்வை ஈ.பி.டி.பியை நோக்கியதாக வருமாக இருந்தால் தமிழ் மக்களது அனைத்து தேவைகளுக்குமான தீர்வுகளும் விரைவில் ஈடேறும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது