அரசியல்வாதிகளால் தொடர்ந்து ஏமாறாது மக்கள் விழிப்புணர்வுடன் சிந்தித்து சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...
அரசியல்வாதிகளால் தொடர்ந்து ஏமாறாது மக்கள் விழிப்புணர்வுடன் சிந்தித்து சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் . தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை கோப்பாயில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக கட்சியின் தலைவர் சத்துர சந்தீப சேனாரத்ன தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.
குறித்த கூட்டத்தில் சுலக்சன் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது பாட்டாளி மக்களும் , கடற்தொழிலாளர்களுக்கும் இதற்கு முன் எப்படி இருந்தோம். எப்படி வாழ்ந்தோம். எப்படியான துன்பங்களை அனுபவித்தோம் என்பதனை எமது மக்கள் சிந்தித்து , சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
அரசியல்வாதிகளால் தொடர்ந்து நாங்கள் ஏமாற்றப்பட்ட வருகின்றோம். எம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாதமையாலே ஏமாற்ற படுகிறோம். எனவே எம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு , தெளிவாக சிந்தித்து ஏமாற்றம் இல்லாது மாற்றத்தை ஏற்படுத்த புதியவர்களான எமக்கு வாக்களிக்க வேண்டும்.
நான் எனது சமூகத்திற்காகவே அரசியலுக்கு வந்தேன். எம் சமூகத்தின் கஷ்டங்களை உணர்ந்தவன். கஷ்டப்பட்டவனுக்கே கஷ்டத்தின் அருமை தெரியும்.
எனவே புதியவர்களான எமக்கு வாக்களித்து எம்மை நாடாளுமன்ற அனுப்பி வைத்தாலே உங்கள் குரலாக என் குரல் அங்கு ஒலிக்கும். அதற்கு மக்கள் மூக்குக் கண்ணாடி சின்னத்திற்கு வாக்களித்து எனது விருப்பு இலக்கமான 03ஆம் இலக்கத்திற்கு வாக்களித்து , எனது சக வேட்பாளர்களான இருவருக்கும் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.