யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரும்பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து. விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த எட்டரை லீட்டர் சட்டவிரோத மதுபானத்தையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானம் மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.