எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) குறிப்பிடப்பட்டுள்ளதாக தபால் ...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) குறிப்பிடப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நவம்பர் 7 ஆம் திகதி வரை தொடரும்.
அதற்குள் எவருக்கேனும் வாக்காளர் அட்டைகள் கிடைக்காத சந்தர்ப்பத்தில், அவர்கள் தபால் நிலையத்திற்குச் சென்று தங்களது அடையாளத்தை உறுதிபடுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.