யாழ். மாவட்டத்திற்கு ஒரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி, அதனூடாக மக்களுடைய பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க ப...
யாழ். மாவட்டத்திற்கு ஒரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி, அதனூடாக மக்களுடைய பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க போவதாக
தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கற்கோவளம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக கடந்த காலங்களில் நாடாளுமன்றம் சென்றும்,
மக்களுக்கு எதுவும் செய்யாதவர்களை நிராகரித்து, இளைஞர்களை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.