அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்க...
அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
அவர் இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, டென்னெஸ்சீ, தெற்கு கரோலினா, மிஸ்சிஸ்சிப்பி, புளோரிடா, ஒக்லஹோமா போன்ற மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்றுள்ளார்.
வெர்மொன்ட், மசாஸ்சூட், கனெக்டிக்கட் போன்ற மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் டொனால்ட் டிரம்ப் 95இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 35 இடங“களை பெற்று பின்தங்குகிறார்.