கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 383 சாரதிகளுக்கு எதிராக சட்டம் நடவட...
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 383 சாரதிகளுக்கு எதிராக சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் 8,392 சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறிய 1,382 சாரதிகளுக்கும், உரிமத்தை மீறிய 690 சாரதிகளுக்கும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 98 சாரதிகளுக்கும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 59 சாரதிகளுக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டது.