பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் நேற்றிரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 73 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவி...
பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் நேற்றிரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 73 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த பெண்ணின் வீட்டில் இருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற அதேவேளை, சந்தேக நபர்களின் காரணமோ அல்லது அடையாளங்களோ இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பதவிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்