கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு உற்பத்தி ச...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு உற்பத்தி சிகரெட்டுகளுடன் பயணி ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான இவர் டுபாயில் உள்ள கட்டிடம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.