பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. சில பரிசுகளை...
பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பண மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.